கழிவு வாய்க்காலுக்குள் நித்திரை கொள்ளும் குடிகாரக் காவாலி!!!
மது போதையின் உச்சகட்டமாக இளைஞர் ஒருவர் சாக்கடையில் சொகுசாக உறங்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மதுரை அருகே வசிக்கும் இளைஞர் ஒருவரே இவ்வாறு செயற்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேயுள்ள சீமான் நகர் பகுதியில் அரச மதுபான கடை அமைந்துள்ளது.
இங்கே 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிமாக மது அருந்திய நிலையில், போதையில் என்ன நடக்கிறது என்பதையே மறந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள சாக்கடையில் ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் மது போதையில் சுகமாகவும், ஸ்டைலாகவும் படுத்து உறங்குகிறார்.
இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இதையடுத்து அவ்வழியே சென்ற சிலர், போதை இளைஞரை எழுப்பியதோடு, போதையை தெளிய வைத்து அனுப்பி வைத்தனர்.