புதினங்களின் சங்கமம்

நல்லூர் கந்தனை தரிசிக்க சென்று ஸ்கேனர் கருவிகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது.

இந்நிலையில் ஆலயத்திற்கு செல்லும் பக்கத்தர்கள் பொலிஸாரின் தீவிர சோதனை உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மறைவான பகுதிகளில் பெண்களும், வெளிப்பகுதியில் ஆண்களும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சில நுழைவாயில்களில் பொலிஸார் ஸ்கேனர் மூலம் உடல் பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன், அடியவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நல்லூர் உற்சவத்தின் போது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தீவிர பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.