புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் கோர விபத்தில் இளைஞன் பலி : மூவர் படுகாயம்

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இரு மோட்டர் சைக்கிள்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

செட்டிக்குளம் பகுதியிலிருந்து மெனிக்பாம் நோக்கி சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கல்லாறு அருவித்தோட்டம் சந்தியில் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் மெனிக்பாமை சேர்ந்த சுப்ரமணியன் தனுஜன் என்ற 19 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன் அதே பகுதியை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.