ஜங்கியும், நிக்கரும் போட்டுக் கொண்டு… அடேய் சுனாசீரன் என்ன பழக்கம்டா இது!! வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை திருவிளையாடல்களின் தொகுப்பு!! வீடியோ
வம்பன் இணையத்தளத்திற்கு எதிராக வடமராட்சி இந்து ஆரம்பபாடசாலை அதிபர் சார்பான அப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், அதிபருக்கு ஆதரவான பெற்றோர் ஆகியோர் சேர்ந்து நேற்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர். குறித்த பாடசாலையின் உப அதிபராக இருக்கும் காயத்திரி வம்பன் இணையத்தளத்தில் அதிபரின் புகைப்படத்தை அனுமதி இன்றி எப்படி பிரசுரிக்கலாம்? அதிபரைப் பற்றி எப்படி தரக்குறைவாக விமர்சிக்கலாம் என கடுமையான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் ஆளுநரும் ”என்னால் வம்பனுக்கு எதுவும் செய்ய முடியாது.. அது தொடர்பாக நான் டிஐயிடம் தெரிவிக்கின்றேன். நீங்கள் டிஐயியை போய் சந்தியுங்கள்” என கூறியதுடன் வடமராட்சி இந்து ஆரம்பபாடசாலையின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிப்பதாகவும் கூறினாராம்..
ஆளுநரிடமும் ஊடகங்களிடமும் தமது கருத்துக்களை துணிச்சலாக கூறிய உப அதிபர் காயத்திரி மற்றும் ஏனைய ஆசிரியைகள்…

வம்பன் இணையத்தளம் எந்தவித அடிப்படை ஊடகதர்மமும் இல்லாது தனது பெயருக்கு ஏற்றது போல் செயற்படுவதால் வம்பன் இணையத்தளத்திற்கு யாழ் குடாநாட்டு மட்டுமல்லாது கொழும்பு மற்றும் அநுராதபுரம் நீதிமன்றம் உட்பட 64 வழக்குகளும் 93 சைபர் கிறைம் முறைப்பாடுகளும் இருப்பதாக பொலிஸ்தரப்புக்கள் ஊடாக அறிய முடிகின்றது. இவை எல்லாம் ஒரு புறம் இருக்க…….
வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் முரன்பட்டவர் மந்திகை வைத்தியசாலை உணவு மேற்பார்வையாளராக இருக்கும் சுனாசீரன் என்பவர் ஆவார். இவரது மனைவி குறித்த பாடசாலையில் ஆசிரியர். இவரது மகனும் குறித்த பாடசாலையில் மாணவன்.
இவர் தொடர்பாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் விசாரித்த போது ஆள் லேசுப்பட்டவர் இல்லை என்பதை அறிய முடிந்தது. யாராவது அப்பாவி அவரை சந்தித்தால் தன்னை குறித்த வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியாகவும் சிலவேளை காட்டிக் கொள்வாராம். சிலவேளை மகப்பேற்று நிபுணராகவும் சிலவேளை சத்திரசிகிச்சை நிபுணராகவும் தன்னை காட்டிக் கொள்வதில் அவருக்கு மிகுந்த பிரியமாம். அதே வேளை குறித்த வைத்தியசாலைத் தரப்புக்கள் கூட சுனாசீலனிடம் அச்சம் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவருக்கு சுகாதரத்துறை உயரதிகாரிகளுன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. ஏன் எமக்குச் சோழி என குறித்த தரப்புக்கள் சுனாசீலன் தொடர்பாக அடக்கி வாசித்து வருகின்றார்களாம்.
சுனாசீரன் …..

சுனாசீரன் பாடசாலைக்கு சென்று அங்கு சண்டித்தனக் கதைகள் கதைத்தமை ஓடியோவாக நாம் இங்கு வெளியிட்டுள்ளோம். அதில் இறுதியாக மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு கதைத்த கதை என்னவெனின் சாறியும் ஜங்கியும் நிக்கரும் போட்டுக் கொண்டு திரியுங்கோ என்பதுதான் ஸ்பெசல் ஏச்சாக இருந்தது. பாடசாலை ஆதரவு அணியினர் ஆட்டோவுடன் அவர் மோதும் சிசிரிவி காட்சிகளையும் அவர் ஆசிரியைகளை ஏசுவதையும் எமக்கு அனுப்பியிருந்தார்கள். அதனையும் நாம் இங்கு வெளியிட்டுள்ளோம்.
சுனாசீலன் மோதலுக்குள்ளான ஆட்டோ

சுனாசீரன் இவ்வாறு அதிபர், ஆசிரியைகளுடன் தனகியதற்கு காரணம் தனது பிள்ளைக்கு விளையாட்டுப் போட்டியில் அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக என பலரும் தெரிவித்திருந்தாலும் சுனாசீலன் இவ்வாறு ரவுடித்தனமாக கதைப்பது தவறுதான்.
குறித்த பாடசாலையில் ஆசிரியைகளுக்குப் பதிலாக பெற்றோர்கள் 5 பேர் வகுப்பில் கல்வி கற்பித்தாாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் பெண்கள் என்பதுடன் எவ்வாறு ஆசிரியைகளுக்குப் பதிலாக குறித்த பெண்கள் அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கலாம் எனவும் அதிபர் தரப்புக்கு எதிரான பெற்றோர்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிபருக்கு எதிரான பெற்றோர்கள் அதிபர் தொடர்பாக ஏராளமான தகவல்களை எமக்கு தந்திருந்தாலும் அது அவரது தனிப்பட்ட செயற்பாடுகள் என்பதால் அதனை நாம் தவிர்த்துள்ளோம்.
இதே வேளை
நேற்று ஆளுநரை சந்தித்த அதிபர் சார்பு அணியினர் வித்தியாசமான ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்கள். குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஜானகி ரீச்சர் கூறிய கருத்தில் தானும் அங்கு கற்பிக்கும் ஆசிரியைகள் சிலரும் அதிபரும் குறித்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதன் காரணமாக தாங்கள் மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்களால் பழி வாங்கப்படுவதாகவும் மிகப் பாரதுாரமான குற்றச்சாட்டை கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்போதும் அவ்வாறான ஒரு பிரிவினைப்பாடு காணப்படுகின்றதா? என்பதை கல்விச்சமூகம் விசாரணை செய்து அதற்கான நடவடிக்கைகளை கட்டாயம் எடுத்தல் வேண்டும். மிகப் பிற்போக்கான செயற்பாடாக குறித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மற்றைய தரப்பு கேவலப்படுத்தியிருந்தால் கட்டாயம் மற்றைய தரப்பை மனநல ஆலோசனைக்கு அனுப்பி அவர்களை நவீன உலகிற்கு கொண்டு வருதல் வேண்டும்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் உயரதிகாரிகள் தொடங்கி பலர் தாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பழி வாங்கப்படுவதாக கூறி சில சிக்கல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இவ்வாறு கூறுவதுண்டு. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நல்லுார் பிரதேசசபை செயலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட வட்டிக்கு கொடுக்கும் முதலாளியும் மாநகரசபைத் தொழிலாளியுமான ஒருவன் தன்னை தாழ்த்தப்பட்ட சாதி என கூறி ஏசியதாலேயே செயலாளரை தாக்கியதாக பொய் கூறி நீதிமன்றத்திலிருந்து பிணையில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி இந்து ஆரம்பபாடசாலை அதிபர் ஆதரவு தரப்பைச் சேர்ந்தவர்கள் வம்பன் இணையத்தள பேஸ்புக் ஊடாக ஆளுநர் மற்றும் பலருக்கு அனுப்பிய கடிதம் மற்றும் வீடியோக்கள் மூலம் தமது தரப்பு நியாயங்களை தெரிவித்துள்ளார்கள். அதனை நாம் அப்படியே இங்கு தந்துள்ளோம்.
கௌரவ ஆளுனர்
வடமாகாணம்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுனாசீரன் (உணவு மேற்பார்வையாளர்) அவர்கள் சம்பந்தமான முறைப்பாடு 22.02.2025 அன்று யாஃவட இந்து ஆரம்பப் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியின் முடிவில் பி.ப 7.30 மணியளவில் மூன்று பெண் ஆசிரியர்கள் மாத்திரம் அதிபர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த போது பெற்றோர் ஆகியவரும் அங்கு கடமையாற்றும் ஆசிரியரின் கணவருமாகிய திரு.க.சுனாசீரன் (உணவு
மேற்பார்வையாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை) என்பவர் மதுபோதையில் அத்துமீறி உள் நுழைந்து ஆசிரியர்களையும் அதிபரையும் தூசன வார்த்தைகளால் பேசியதுடன் உயிர் ஆசிரியர்களை அச்சுறுத்தலையும்
விடுத்து உச்சதொனியில் பீதியடையச் செய்து வெளியேறியுள்ளார்;;. பின்னர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். சத்தமிட்டு அதிபர், இவர் ஒரு அரச உத்தியோகத்தராக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 10 வருடங்களிற்கு மேலாக கடமையாற்றி வருகின்றார். இவருக்கு வழங்கப்படுகின்ற இடமாற்றத்தினை தனது லஞ்சம் வழங்கும் பழக்கத்தினூடாக நிறுத்திவைத்துள்ளார். இவர் வைத்தியசாலையில் அத்தியட்சகருடன் சேர்ந்து பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.
1.
தனது இடமாற்றத்தினை இரத்துச் செய்வதற்காக, தனது கடமைகளிற்கு மேலதிகமாக தனக்கு கணனி அறிவு உள்ளதாகவும் தனக்குப் பதிலாக வருபவருக்கு கணனி அறிவு இல்லை எனவும், அதன் காரணத்தால் ஆதார வைத்தியசாலை சாவகச்சேரியிலிருந்து வந்தவரை (சமையல் மேற்பார்வையாளர்) இங்கு வரவிடாது வைத்திய அத்தியட்சகர் DR திவாகரனுடன் சேர்ந்து இடமாற்றத்தினை இரத்துச்செய்யுமாறு கடிதங்கள் பல அனுப்பி அரச கடப்பாடுகளுக்கு பங்கம் விளைவித்துள்ளார்.
2.
வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்கத்தினூடாக அன்பளிப்புகளில் மோசடி வேலை செய்கின்றார். பெறப்படுகின்ற பெறப்பட்ட பொருட்கள் உரிய இடங்களிற்கு கொடுக்கப்படவில்லை. தனது முகப்புத்தகத்தில்
பிரசுரித்த அன்பளிப்பான Photo copy புதிய இயந்திரம் ஆய்வுகூடத்திற்கு கொடுக்கப்படவில்லை. சிற்றுண்டிச்சாலை, அருகில் கொள்வனவுகளில் ஈடுபடுகின்றார். அரச உள்ள கடைகள் நடைமுறைக்குப் என்பவற்றில் பொருந்தாத பொருட்கள் நடவடிக்கைகளில்
3. உணவு மேற்பார்வையாளரான சுனாசீரன் தனக்கு டயிவழி தரப்படவேண்டும் எனக்கூறி அதனைப்பெற்று வைத்தியசாலையை தளமறாகப் பாவித்து யாஃவட இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெறாத விடயங்களை நடைபெற்றது போன்று வட்சப் குழுக்களில் பதிவிட்டு சமூகவிரோத நடவடிக்கைகளை செய்து வருகின்றார்.
4. இவர் கடமை நேரத்திற்கு சமூகமளிப்பதில்லை. இவரது கடமை நேரம் காலை 6.30 ற்கு ஆரம்பமாகின்றது. ஆனால் காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை
பாடசாலை வீதியில் மோட்டார் சைக்கிளில் வட்டமிட்டபடி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கின்றார். உயிர் அச்சுறுத்தல் விட்டு வருகின்றார். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ; 5. யாஃவட இந்து ஆரம்பப் பாடசாலையில் 22.02.2025 இல்ல மெய்வல்லுனர் போட்டி முடிவின் பின் இவர் நடந்துகொண்டதை அரச நடைமுறைகளை மீறுகின்ற செயல் என்பதையும் மதுபோதையில் பிரவேசித்ததும் பொலிஸ் சாராயம்
நிலையத்தில் மணக்க சாராயம் மணக்க பாடசாலையில் மணப்பதாக பொலிசார் பதிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அதனை உறுதிசெய்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள் . அங்கு கடமையில் இருந்த வைத்தியருடன் கதைத்து தனக்கு வேலை பறிபோகப் போகிறது என்று தெரிவித்து வைத்தியசாலையில் மது மணக்கவில்லை என அறிக்கையைப் பெற்றுக்கொடுத்தார். அதனை அறிந்த பெற்றோராகிய நாங்கள் மேன்முறையீடு செய்து சட்ட வைத்திய அதிகாரி ஊடாக சுநிழசவ பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தோம். அதற்கிணங்க சட்ட வைத்திய அதிகாரி கடமையை மேற்கொண்டார். சட்ட வைத்திய அதிகாரி அவர்கள் கூறிய விடயங்கள் தம்மிடம் பரிசோதிப்பதற்குரிய மருந்துகள் இல்லை. தாங்கள் அவரின் நடத்தையை மட்டுமே பார்த்து முடிவு செய்வதாகவும் தெரிவித்தார். இதன் பின்னர் விடுதியில் அனுமதி பெற்று போகின்ற வழியில் தள்ளாடித் தள்ளாடி பாதுகாப்புச் சேவையில் இருந்த அமலதாஸ் என்பவருக்கு அடித்தார் ;. அது தொடர்பாக அமலதாஸ் என்பவர் தனக்கு சுனாசீரன் மது போதையில் அடித்து வி;ட்டார் என மேற்பார்வையாளரிடம் அறிவித்திருக்கின்றார். இவ்வளவும் அறிந்த பெற்றோர் JMO SIR ற்கு உங்களுடைய Report ல் எமக்கு நம்பிக்கை இல்லை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும்படி செவிசாய்க்கவில்லை. கேட்டிருந்தோம்.
அதற்கு அவர்கள் வைத்திய அத்தியட்சகரிடமும் தொடர்புகொள்ள அவருடைய தொலைபேசி இலக்கத்தை அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் எமக்குத் தரவில்லை. இதற்கிடையில் மறைமுக தொடர்பாடல்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள் என சந்தேகிக்கின்றோம். JMO, MS, MO, ஆகியோருக்கிடையே நடந்த உரையாடல்களை உரிய இடத்தில் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு எமக்கு உரிய தீர்வு பெற்றுத் தரவேண்டும் என கேட்டு நிற்கின்றோம். மந்திகையில் பரிசோதனை மருந்துகள் இல்லாமல் போவதற்கான காரணம் என்ன? பரிசோதனை இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதற்கான காரணம் என்ன?
ஆய்வுகூடங்களில் இயந்திரங்களுக்கு இருக்கின்றார்களா? பொறுப்பானவர்கள் பிழைப்படுத்தி இரண்டு கிழமைக்கு முன் பெற்றோர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு ர்யசவ யவவயம மருந்து இல்லாது வெளியில் ஆய்வுகூடத்தில் 3500 ரூபா கொடுத்து பரிசோதனை செய்துள்ளார். இது என்ன வைத்தியசாலை நிர்வாகம்? இவ்வாறு ஏழை மக்கள் 3500 ரூபா கொடுத்து பரிசோதனை செய்ய முடியுமா?
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து நோயாளர்களாகிய எம்மைக் காப்பதோடு எமது பிள்ளைகள் கற்கும் பாடசாலையில் நடைபெறும் சுனாசீரனின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தி எமது பாடசாலையின் ; அதிபர,;
ஆசிரியர்கள,;
பெற்றோர்களுக்கு
கேட்டுக்கொள்கின்றோம்.
.
பிரதிகள்
1. பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்.
உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு பெற்றோர்கள்
2. செயலாளர், சுகாதாரசேவைகள் திணைக்களம், பண்ணை, யாழ்ப்பாணம்.
3. மாகாணப்பணிப்பாளர், சுகாதாரசேவைகள் திணைக்களம், பண்ணை, யாழ்ப்பாணம்.
4. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்டம்.
5. மனித உரிமை ஆணைக்குழு, யாழ்ப்பாணம்.
பாடசாலை என்பது மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் உள, உடல் மேம்பாட்டுக்காக செயற்படும் ஒரு சிறப்பு மிக்க நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை தலைமை தாங்கி நடப்பவரும் நிறுவன உத்தியோகத்தர்களும் எந்தவித அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தலையீடுகள் இன்றி நிறைவான மனநிலையில் இருந்தால் மாத்திரமே நிறுவனத்தில் கற்கும் மாணவச் செல்வங்களின் வளர்ச்சியில் கூடுதலான சிறப்பு ஆற்றல்களை கொண்டு வர முடியும். ஆகவே குறித்த பாடசாலை சமூகம் தொடர்பில் கல்வியலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.

