யாழ்ப்பாண வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்யியோகத்தரின் மோசமான செயல்….!
புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுமார் 300 கிலோ மீற்றர் பயணம் செய்து தனது உறவினர் ஒருவரை பார்வையிட சென்ற நபர் ஒருவர் இன்று அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டார்
இன்றைய தினம் வியாழக்கிழமை 27/02/2025 அதி காலை 6:00 மணிக்கு சென்ற இவர் நோயாளரை பார்வையிடும் உரிய பாஸுடன் சென்ற போதும் முஸ்லிம்
என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.
முதலில் பாஸ் தன்னுடைய போனில் போட்டோவாக இருந்தது அதை காட்டி ஒரிஜினல் பாஸ் உள்ளே நோயாளியை கவனித்து வருபவரிடம் உள்ளது. அவசரமாக சிறுநீரக நோயாளியான குறித்த நபருக்கு யாழ் போதனா வைத்தியசாலை சிறுநீரக சிறப்பு வைத்தியர் பிரம்மா அவர்களால் எழுதி தரப்பட்ட மருந்துகளை கொடுக்க வேண்டியிருந்தது.
புத்தளத்தில் இருந்து வருகிறேன் பத்து நிமிடம் பார்வையிட வேண்டும் நான் அரசு ஊழியராக இருக்கிறேன். கடமைக்காக மன்னாருக்கு செல்ல வேண்டும் என்று 45 நிமிடம் கெஞ்சி அனுமதி கேட்டபோதும் கடைசி வரைக்கும் போக விடவே இல்லை
ஆனால் பாஸ் இல்லாத சுமார் 50 பேரை எந்தவித கேள்வியும் கேட்காமல் நோயாளிகளை பார்வையிட அனுமதித்தார்.
பின்பு ஒரிஜினல் பாஸ் வாங்கி காட்டிய போது அந்த பாசை பார்த்துவிட்டு உன் நோயாளியின் பெயர் என்ன உன்னை உள்ளே விட முடியாது. உள்ளே போய் என்ன செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியாது எதற்காக போறீங்க என்றும் தெரியாது எப்படியும் உம்மை உள்ளே விட முடியாது என்று அடாவடித்தனமாக சொல்லி திருப்பி விட்டார்.
அதன் பின் இது தொடர்பாக வைத்தியசாலை காவலாளிகளுக்கு பொறுப்பானரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது மிகவும் அலட்சியமான முறையில் உரியவர் கதைத்தது மட்டுமின்றி நேரில் வந்து கதைத்து கொள்ளுமாறு மிகவும் அடாத்தாக கூறினார்.
இந்த விடயம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

