திருகோணமலையில் மோசமான செயலில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குடும்பப் பெண்ணொருவர் இன்று நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா -02 றகுமானிய்யா நகரைச் சேர்ந்த (வயது -47) எனும் குடும்பப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.
இவரிடமிருந்து 1860 மில்லிக் கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணை கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.