புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில், வழிப்பறி பகல் கொள்ளை. (இது ஓர் சமூக விழிப்புணர்வு செய்தியாகும்)

1. ஒன்பது (09) லட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் – Yamaha Fazer Bike
2. பெறுமதியான mobile phone
3. பணப்பை (Money Purse 👛)
இளைஞர் குழுவால் வழிமறித்து பறிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் பல்வேறு பிரதேசங்களில் இரவு நேர வீதி பயணங்களின் போது களவு மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் போன்றவை நடைபெற்று வருகின்றது.
இன்றைய (20) தினம் அதிகாலை வேலை 7:00 மணி அளவில் பரந்தனிலிருந்து பூநகரி செல்லும் வீதியின் முக்கொம்பன் பகுதியில் வீதியோரமாக நின்ற இளைஞர் ஒருவர் தன்னை ஏற்றிச் செல்லுமாறு உதவி கேட்டபோது வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
இடையே திட்டமிட்ட வகையில் மோட்டார் வண்டியில் வந்தவரின் கழுத்தில் கூறிய கத்தியினை வைத்து அச்சுறுத்தி குறித்த நபரிடம் மோட்டார் சைக்கிள் அவருடைய பெறுமதியான கைத்தொலை பேசி மற்றும் அவருடைய பணப்பை அடங்கிய பல பொருட்களையும் மோட்டார் சைக்கிளையும் பறித்து சென்றுள்ளனர்.
எனவே இனிவரும் நாட்களில் நீங்களும் உங்கள் பயணத்தின் போது பாதுகாப்பாக இருங்கள். வீதி ஓரங்களில் பயணத்துக்காக உதவி கேட்பவர்களை நீங்கள் ஏற்று செல்லும்போது மிகவும் அவதானமாக இருங்கள்.
முகம் தெரியாத, அறிமுகமில்லாத நபர்களை முடிந்தவரை ஏற்றுவதைத் தாருங்கள். குறிப்பாக இரவு நேரங்களில் தெரியாத நபர்களை உங்கள் வாகனங்களில் அல்லது மோட்டார் சைக்கிளில் ஏற்றுவதை முற்று முழுதாக தவிருங்கள்.
குறிப்பாக இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் இவ்வாறான வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
அண்மை நாட்களாக வெளி வராத செய்திகளாக பரந்தன் – முல்லைதீவு விதிகளிலும் ஆட்கலற்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிளை மறித்து தாக்கி கொள்ளையடிக்க முயற்சிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
முடிந்தவரை இரவு நேர பயணங்களில் பாதுகாப்பாக இருங்கள் விழிப்பாக இருங்கள்.