புதினங்களின் சங்கமம்

ரயிலில் மோதி 5 யானைகள் பலி ; மட்டக்களப்பு ரயில் போக்குவரத்து தடை!

இன்று (20) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால் மட்டக்களப்பு பாதையில் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரை தடையில்லாமல் இயக்கப்படவிருந்த புலத்திசி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேசமயம் ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி சீர் செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.