யாழில் டிப்பர் மோதி சைக்கிளில் சென்றவர் மரணம்! புகைப்படங்கள்
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(18) துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் .மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






