நேற்று சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் ஏற்பட்ட விபத்துத் தொடர்பாக யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் கார்ச் சாரதி தனது சமூகவலைத்தளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதனை நாம் அப்படியே இங்கு தந்துள்ளோம்…
மறு ஜென்மம் எடுத்து வந்தது போல உணர்கின்றேன்!
வைத்தியசாலையில் இருந்து நலமாக வீடு திரும்பியுள்ளேன். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சுகமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன். எனது தவறினால் ஏற்பட்ட இந்த விபத்துக்கு அவரின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களிடம் பொது வெளியில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை வைத்தியசாலையில் வந்து பார்த்தவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்





