புதினங்களின் சங்கமம்

யாழில் ஜே.வி.பி எம்.பி இளங்குமரன் உட்பட 3 பேர் வாகன விபத்தில் படுகாயம்!! CCTV வீடியோ

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க .இளங்குமரன் பயணித்த கார் சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்று சாவகச்சேரி நோக்கி திருப்பிய வேளை பின்னால் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர், சாரதி மூவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

May be an image of 10 people, car and crowdMay be an image of grassMay be an image of grass