என்னப்பா சத்தியமூர்த்தி டொட்டர்.. அருச்சுனா வைச்சு வெளுத்தெடுத்த காவாலியை விச ஊசி அடிச்சு சாக்காட்டப் போறீங்களாம்!! உண்மையோ?
அவசரப்பட்டு எங்களை பொலிசில போய் மாட்டிவிட வேண்டாம் டொட்டர்… உந்த பேஸ்புக், யூரியூப்களில வாற விசயங்களைப் பார்க்க வயித்தை கலக்குது. அதாலதான் இது தொடர்பா உங்களிட்ட கேக்க ஆசைப்பட்டம்.
வலம்புரி ஹோட்டலில் உங்களால விசரன் என்று சொல்லுறவன் தன்னோட தனகினவனை போட்டு துவைச்செடுத்து உங்கட ஹொஸ்பிட்டலுக்கு அனுப்பினவனெல்லோ… அந்தக் காவாலியை நீங்கள் பிளான் பண்ணி கொலை செய்ய ஆயத்தம் பண்ணுறதாய் அருச்சுனாவின் ஆதரவாளர்கள் எல்லாரும் சொல்லிக் கொண்டு திரியுறாங்கள்… உண்மையோ? தலையில ஒப்பிரேசன் என்டு சொல்லி அவனை ஆசுப்பத்திரியில இருந்து துண்டு வெட்டாமல் வைச்சிருந்து அவனை ஒருமாதிரி மேல அனுப்பிப் போட்டு கொலைப் பழியை அருச்சுனா எம்.பி மீது போடத்திரியுறதா உவங்கள் எல்லோரும் கதைச்சுத் திரியுறாங்கள்….. என்ன செய்யிறீங்கள் டொட்டர்…. கெதியாய் அவனை துண்டு வெட்டி அனுப்புங்கோ… இல்லாட்டி சாதாரண சனங்கள் கூட உங்கள சந்தேகப்படவேண்டியதா இருக்கும்….. அருச்சுனாவுக்கு எதிரா செய்யுறது செய்யுறது என்டு நீங்கள் எல்லாரும் சேர்ந்து செய்யிற அலங்கோல வேலையால அவனுக்கு இன்னும் வாக்கு வங்கியை அதிகரிச்சுக் கொண்டு தான் இருக்கிறீங்களே தவிர அவன்ர செல்வாக்கை குறைக்கிறதுக்கு எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கிறீங்கள் இல்லை…..

