யாழில் கஞ்சா பீடி குடிக்கும் இந்த மாணவர்கள் யாருடைய பிள்ளைகள்? வீடியோ
யாழில் உள்ள ரியூசன் ஒன்றில் கல்வி கற்று விட்டு கால்நடையாக வந்து யாழ் நகரப்பகுதியில் ஆஸ்பத்திரி வீதி சிக்னல் சந்திக்கு சற்றுத் தொலைவில் காணப்படும் கடை ஒன்றில் விற்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் கஞ்சா பீடியை வாங்கிக் கொண்டு ஓ.எல்.ஆர் சேர்ச் ஒழுங்கைக்குள் வந்து கஞ்சா குடிக்கும் இந்த மாணவர்கள் எந்தப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள்? யாருடைய பிள்ளைகள்? இனிவரும் காலம் இவ்வாறானவர்களை பகிரங்கமாக வீடியோ மூலம் காட்சிப்படுத்தவுள்ளோம்….. பெற்றோர் பார்த்து மகிழவும்… ஒரு கஞ்சா பீடி 800 தொடக்கம் 1000 ரூபா வரைக்கும் சிறுவர்களாக உள்ள இவ்வாறான மாணவர்களுக்கு விற்கப்படுகின்றதாக தெரியவருகின்றது. ஆகவே தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாக காசு கொடுத்து சந்தோசப்படும் பெற்றோருக்காக இனிவரும் காலம் இவ்வாறான காட்சிப் பதிவுகளை நாம் பகிர்ந்து கொள்கின்றோம்.