யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அங்கு நிறை வெறியில் நின்ற பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஜேர்மனியிலிருந்து வந்தவர் எனத் தெரியவருகின்றது.
அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நபரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா தெரிவித்துள்ளார்.
சம்பவம் நொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





