புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு விபத்தில் தீப்பற்றி எரிந்த ஓட்டோ!

மட்டு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் சற்று முன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிரதான வீதியூடாக மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காருமேகுருக்கள்மடத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.
விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் அருகிலிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டமாவடியைச் சேர்ந்தோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.