புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் யாழைச் சேர்ந்த நிர்மலாவைக் கொன்ற கணவன் கருனாகரனுக்கு நடந்த கதி இது!!

சுவிஸ்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலையில், மனைவியைக் கொலை செய்த புலம்பெயர் இலங்கை தமிழர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி இடம்பெற்றது, சம்பவம் இடம்பெற்றபோது பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்த நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவர்

பெர்னர்ஸ் எஸ்வெர்க் என்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் தமிழ்பெண், 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி  காலை 8.30 மணியளவில் கொல்லப்பட்டார். சிற்றுண்டிச்சாலைக்குள் கணவர் கத்தியுடன் நுழைந்து மனைவியை சரமாரியாக குத்திக் கொன்றார்.

பெர்னர்ஸ் எஸ்வெர்க் என்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் தமிழ்பெண், காலை 8.30 மணியளவில் கொல்லப்பட்டார். சிற்றுண்டிச்சாலைக்குள் கணவர் கத்தியுடன் நுழைந்து மனைவியை சரமாரியாக குத்திக் கொன்றார்.

இந்த கொலை நடந்த போது, அந்த பகுதியில் சிலர் நின்றிருந்தனர்.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் விழுந்து இறந்தார். பொலிசார் அங்கு வந்த போது, சந்தேகநபரான கணவர் எதிர்ப்பின்றி சரணடைந்தார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கருணாகரன் நர்மலா (47) என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் கடந்த 25 வருடங்களாக குடும்பத்துடன் சுவிற்சர்லாந்தில் வசித்து வருகின்றார்.

வழக்கு  விசாரணையின் போது, ​​வாக்குவாதத்தின் போது தனது மனைவியைக் குத்தியதாக கருணாகரன் ஒப்புக்கொண்டார். சம்பவத்தை அடுத்து  கைது செய்யப்பட்ட கருணாகரன் குற்றம் நடந்ததிலிருந்து தற்போது வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை தமிழர் குற்றத்தை ஏற்றுகொண்டதை அடுத்து அவருக்கு சிறை தண்டனை வழங்க வேண்டுமென சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.