சுவிட்சர்லாந்தில் இலங்கை இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளார்.
சுற்றுலா சென்ற 22 வயதான இலங்கை இளைஞர், நேற்று முன்தினம் மாலை 7.30 மணியளவில் வடகிழக்கு சுவிஸ் நகரமான St Gallen பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
30 நிமிடங்களுக்கு பின்னர் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் கரையில் இருந்து 3 தொடக்கம் 4 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது உயிரிழந்த இளைஞருக்கு நீச்சல் தெரியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அவர் தனியாக குளத்தில் இறங்கியுள்ளார். சம்பவம் குறித்து St Gallen பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.