யாழில் சைக்கிளின் வயது 62!! ஓடிய பெண்மணி யார் தெரியுமா?? இதோ விபரங்கள்!!(Video)
நீங்கள் படங்களில் காணும் சைக்கிளிற்கும், அதன் சொந்தக்காரருக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் நீண்ட ஒரு வரலாறு உண்டு.
படத்தில் நீங்கள் காணும் Raleigh Sports சைக்கிளானது படத்தில் காண்பவரான செல்வி இராஜகுலதேவி அபிமனசிங்கம் தனது இள வயதில் (படம் அவரது 78 வயதில் எடுக்கப்பட்டது) அவர் ஆங்கில ஆசிரியராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த காலத்தில் 1959ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டு, உடுவில் கிராமத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது அந்தச் சைக்கிளிற்கு 62 வயதான நிலையில், அதற்குப் புதிதாக paint அடிக்கப்பட்டுள்ளது.
செல்வி இராசகுலதேவி அபிமனசிங்கம் (1939.09.20) எனது மூத்த சகோதரி. அவர் 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி உடுவிலில் காலமானார்.
எனது மூத்த சகோதரி சைக்கிளை தனது மூன்று மாதச் சமபளத்தில் (ரூபா 225/=) அன்று வாங்கியிருந்தார். அக்காலத்தில் 1 தங்கப் பவுண் 60 ரூபாய்கள்வரை என அறிந்தேன்.
இதிலிருந்து ஒரு சைக்கிளை வாங்குவது அன்று பொியவொரு காரியமாக இருந்தது என்பது தெளிவாகிறது.
எனது மூத்த ஆசிரியைச் சகோதரி உடுவிலில் சைக்கிளில் கற்பிக்கச் சென்றபொழுது, ஆண்கள், பெண்கள், ஆசிரியைகள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் எல்லோரும் அதை ஒரு பெரும் குற்றமாகக் கருதினர், பேசினர்.
அக்காலத்தில் ஆசிரியைகள் சைக்கிளில் பாடசாலைகளுக்குக் கற்பிக்கச் சென்றதில்லை. அரச, தனியார் நிறுவனங்களில் வேலை செய்த பெண்களும், வேலைககுச் சைக்கிளில் சென்றதில்லை. சாதாரணமான பெண்களும் சைக்கிளில் சென்றதில்லை.
பெண் பிள்ளைகளும், தாய்மாரும், தமது ஆண் சகோதரங்கள், பிள்ளைகளிடமும், பிறரிடமும் வேண்டியே தமது அவசர காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது. ஒட்டு மொத்தத்தில், அன்றைய பெண்கள்எமது சமூகத்தில் பிறரில் தங்கியிருக்கவேண்டியவர்களாக வைக்கப்பட்டிருந்தனர்.
அக்காலத்தில், கணவன்மார்கூடத் தமது மனைவியைத் தமது சைக்கில் ஏற்றித் திரிவதைக் காணமுடியாதுதான் இருந்தது. இந்தநிலையில், குடும்பப் பெண்கள் நடந்துதான் திரியவேண்டியிருந்தது. அல்லாவிடின் மோட்டார் கார்களில் பெருஞ்செலவுடன் திரியவேண்டியிருந்தது.
ஆனால், எமது சமூகத்தின் ஒரு சார் பெண்களும், ஆண்களும் பெண்கள் சைக்கிள் ஓடுவது கற்புக்குப் பங்கமானது எனவும் பெருங்கவலைபடுவதுபோல் பேசிக்கொண்டனர்.
எமது சமூகத்தின் பெரும்பான்மையின ரானவர்களின் நிலை இப்படியிருக்கையில், எனது தந்தையார், பெண் பிள்ளைகள் சைக்கிளை ஓடத் தெரிந்திருந்தால், அவர்கள் தங்களது காரியங்களைப் பிறரில் தங்கியிராது தாமே செய்யக்கூடிய நிலையும், அவசர காலத்தில் வீட்டின் காரியங்கையும் அவர்கள் தாமாகச் செய்யும் நிலையும் உருவாகும் எனக் கூறி, எனது சகோதரிகளும், ஊரில் வசித்த பிற பெண் பிள்ளைகளும் சைக்கிளை ஓடுவதை ஊக்குவித்தார்.
ஒரு சில கிறஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பிற்காலத்தில் சைக்கிள்களை ஓட ஆரம்பித்திருந்தபோதும், சைவக் குடும்பத்தினர் தங்களது பிள்ளைகள் சைக்கிளில் செல்வதை விரும்பவில்லை. அவாகள் சைக்கிள் ஓடுவதில் மாத்திரம்தான் கற்புப் பற்றிப் பேசிவந்தனர்!!
இப்படியான சிலர் சிறுவர்களைக்கொண்டு கூக்காட்டுவிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், இவைகள் எல்லாம் எனது தந்தையாலும், எம்மாலும் முறியடிக்கப்பட்டன.
உடுவில் விவசாய நிலப்பகுதிச் சுற்றாடலில் அன்று பெலீஸ் நிலையம் இருந்திராத நிலையில், 1930 களிலிருந்து 1947ஆம் ஆண்டு வரை சுண்ணாகத்தில் பெலீஸ் நிலையம் இருந்ததில்லை. 1947ஆம் ஆண்டில் சுண்ணாகத்தில் பெலீஸ் நிலையம் புதிதாகத் திறக்கப்பட்டதுவரை எனது தந்தை உடுவில் – சங்குவேலி கிராமத்தின் பெலீஸ் விதானையாக இருந்து வந்திருந்தார். அதன் பின்னரும் உடுவிலின் விதானைாக இருந்து வந்திருந்தார்.
எனது குடும்ப முன்னோர்கள் பல தலைமுறைகளாக உடுவில் விவசாயக் கிராமத்தில் வாழ்ந்து வந்ததால், உடுவில் கிராமத்தின் ஒவ்வொருவரையும் சிறுவர்களாக இருந்த எமக்குக்கூட அன்று தெரிந்திருந்தது. இதனால், கூக்காட்டுகின்றவர்கள் எவர்கள், கூக்காட்டுவிப்பவர்கள் எவர்கள் என்பதையெல்லாம் அறிந்து எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், எமது சமூகத்தின் நிலையில் மாற்றங்கள் துரிதமாக ஏற்படவில்லை.
1960களில் எனது சகோதரி, இராமநாதன் கல்லூரியில் கற்பித்த காலத்தில் ஒரு காரினையும் வாங்கி ஓடித்திருந்தார்.
பெண்களின் சுதந்திரத்தில், முன்னேற்றத்தினில் அன்றைய பெண்கள் எப்படிக் கரிசனையாக இருந்தனர் என்பதை அறிய, அன்றைய இராமநாதன் கல்லூரி மாணவிகளும், அதிபர். ஆசிரியர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பதை அறிந்தால் போதுமானது.
பெண் ஆசிரியை ஒருவர் காரைத் தானாக ஓட்டிப் பாடசாலைக்கு வருவதை அன்றைய இராமநாதன் கல்லூரியின் ஒருசார் மாணவிகள் விரும்பியிருக்கவில்லை. இதனால், அவர்கள் காரைில் ஆணிகள், பிறகொண்டு கீறுவதில் ஈடுபட்டுவந்தனர்.
இந்தநிலையில், காரை கல்லுரியில் அதிபரின் காரியபலயத்திற்கு அருகில் இருந்த கார் விடும் Garage இல் விடக் கேட்பொழுது, அன்றைய அதிபர் அதற்கு மறுத்துவிட்டார்.
ஆனால், முன்னர் ஓர் ஆண் ஆசிரியன் அந்த Garage இல் கார் விடுவதற்கு அதே அதிபர் அனுமதியை வழங்கியிருந்தார். இதலிருந்து அந்தக் கல்லூரி மாணிவிகள் எப்படியான பெண்களாக உருவாக்கப்பட்டு வந்திருப்பர் என்பதை ஒருவர் ஊகித்தறிய முடியும்.
கல்லூரி அதிபரின் இந்தச் செயற்பாட்டை அறிந்த கல்லுரி தாபகர் குடும்பத்தினர் (செனேற்றர் எஸ். நடேசன்) தமது Garage இல் வாகனத்தை விட எனது சகோதரிக்கு அனுமதித்திருந்தனர். அக்குடும்பம் எனது தந்தையின் குடும்பத்திற்கு நன்கு பழக்கப்பட்டவர்கள்.
1978ஆம் ஆண்டு காலத்தில் பெண்கள் ஓடுவதற்கான Honda C 90 மோட்டார் சைக்கிள் புகுத்தப்பட்ட நிலையில், எனது மூத்த சகோதரியும், அடுத்த சகோதரியான சட்டத்தரணி சாந்தா அபிமனசிங்மும் தமக்கு Honda C 90 மோட்டார் சைக்கிள்களை வாங்கி ஓடித்திருந்தனர்.
தமிழ்ப் பெண்கள், ஆண்கள் மாத்திரமல்ல. பொலீசாரும்கூட பெண்கள் மோட்டார் சைக்கிள்களை ஓடுவதை அன்று விரும்பியிருக்க வில்லை என எனக்கு அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளானது அன்று ரூபா 9,900/= இற்கு விற்கப்பட்டது என அறியவருகிறது.
பெண்கள் பிறரில் தங்கியிருக்காது சற்றுத் தொலைவான இடங்களுக்குத் துரிதமாகச் சென்று தமதும், விட்டினதும் காரியங்களைச் செய்ய மோட்டார் சைக்கிள் பெரிதும் உதவக்கூடியதாக இருந்தும், எமது சமூகம் மோட்டார் சைக்கிளைப் பெண்கள் பாவிப்பதை விரும்பவில்லை. அதை ஒருவித குற்றமாகத்தான் கருதியது.
இதனால், 1990களில் பெண் புலிகள் சைக்கிள்களையும், மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்தியபொழுதும், மிகப்பெரும்பான்மையான சாதாரண யாழ்ப்பாணத் தமிழ் பெண்கள் சைக்கிள்களையோ, மோட்டார் சைக்கிள்களையோ, கார்களையோ ஓட்ட முடியாதவர்களாகத்தான் இருந்தனர்.
இதனால், போர்க் காலத்தின்போதும், இடப் பெயர்வுகளின்போதும் தமிழ்ப் பெண்கள் பிற ஆண்களின் சைக்கிளின் முன் Barஇல் இருந்து பிற ஆண்களின் கன்னங்களைக் தேத்தபடி செல்வதையும், பின் கரியரில் இருந்து பிற ஆண்களின் வயிற்றை கட்டிப் பிடித்துத் தமது மர்பினை அழுத்திச் செல்வதையும்தான் காணமுடிந்தது.
இதற்கும் பெண்களின் கற்புக்கும் அக்காலகட்டத்தில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கவில்லையா?
“அவா” (Craving) மிகுந்த யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் எப்படியான சந்தர்ப்பவாத போக்கினைக் கொண்டிருந்தது என்பதை அறிய இது போதுமானதில்லையா?
2010ஆம் ஆண்டின் பின்னர்தான் தமிழ்ப் பெண் சமூகமானது Scooter களிலும், பெண்களுக்கபான மோட்டார் சைக்கிள்களிலும் பெருமளவில் திரிவதைக் காணமுடிகிறது. குடும்பத்தின் சுமையைத் தாம் பெருமளவில் சுமப்பதைக் காணமுடிகிறது.
எதுவித்திலும், யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் சமூகம் எனது சகோதரிகளிலும் எத்தனை தசாப்தங்கள் பின் நிற்கின்றது?
உயர் கல்வி, தொழில்துறை கல்வி, தொழில்துறை, அரசியல், …. ஏனையவைகளிலும்கூட, யாழ்ப்பாணப் பெண் சமூகமானது எனது குடும்பம் சார்ந்த பெண்களிலும் பலப் பல தசாப்தங்கள் பின்நிற்கின்றது.
இதற்கு எவை காரணங்களாக இருக்கலாம்?
நண்பா்களே!
உங்களது கிராமங்களிலும், நகர்களிலும் பெண்களது நிலைகள் எப்படி?
உங்களது கருத்துக்கள் எவை நண்பர்களே,?
முகவலையில் படித்ததில் பிடித்தது — with Thanam Vettivelu.