அம்பாறையில் இரட்டை குழந்தைகளை கொலை செய்த தாயின் பரபரப்பு வாக்குமூலம்

அம்பாறையில் இரட்டை குழந்தைகளை படுகொலை செய்து பரபரப்பை ஏற்படுத்திய தாய், அது
தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் எனினும் சாக முடியவில்லை. இதனால் பிள்ளைகளை
கொலை செய்தால் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொலை செய்ததாக பரபரப்பு
தகவலை வளியிட்டுள்ளார்.

அம்பாறை நிந்தவூர் பகுதியில் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த என்.அனிஷா என்
பெண்மணி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலுள்ள உளவளப்பிரிவில் கணவர் ஏ.
சியாதுல் ஹக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனினும் சம்மாந்துறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் அங்கொட வைத்தியசாலையின்
உளவளபிரிவில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளார்.

கடந்த வாரம் இரட்டை பெண் குழந்தைகளை அனிஷா என்ற தாய் கொடூரமான முறையில் கழுத்தை
அறுத்த படுகொலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)