புதினங்களின் சங்கமம்

டக்கரால் நியமிக்கப்பட்ட யாழ் மத்தியகல்லுாரி அதிபரை ஏன் இன்னும் மாற்றவில்லை!!கஜேந்திரகுமார் கூறியது என்ன?

யாழ் மத்தியகல்லுாரி அதிபர் எஸ் இந்திரகுமாரை ஏன் இ்ன்னும் பதவியிலிருந்து அகற்றவில்லை எனவும் டக்ளஸ்தேவானந்தாவின் சிபார்சில் வந்தவரை இன்னும் எதற்காக பாடசாலையில் தொடர்ந்து வைத்துள்ளீர்கள் எனவும் பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த காலத்தில் யாழ் மத்தியகல்லுாரி அதிபர் நியமனம் தொடர்பாக குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. பெண் அதிபர் ஒருவரை கல்வி அமைச்சு அங்கு நியமித்த போது டக்ளஸ் தலையிட்டு அந்த அதிபரைத் துரத்திவிட்டு இந்திரகுமாரை நியமித்திருந்தார். இவ்வாறான நிலையில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார், முன்னைய அரசின் பாராளுமன்ற அமர்வின் போது தனக்குப் பின்னால் பாராளுமன்றில் இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்துரகுமாரை அதிபராக நியமித்தது தவறு என அந் நேரத்தில் சுட்டிக் காட்டியிருந்தார், ஆனால் தற்போது குறித்த அதிபரை பாடசாலையிலிருந்து அகற்றாது தொடர்ந்து எதற்காக அங்கு வைத்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

இதே வேளை அதிபர் இந்திரகுமார் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் அதே வேளை அதிபர் இந்திரகுமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவரை அதிபர் பதவியிலிருந்து அகற்ற உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சித்து வருகின்றார்கள் என இந்திரகுமார் தரப்பு ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.