படுத்திருக்கும் போது ஏன் தொல்லைப்படுத்துகின்றாய்!! சற்று முன் கார்கில்ஸ் மனேஜர் கத்தியது ஏன்?
62 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒருலட்சத்து 50 ஆயிரம் ரூபா ‘கிப்ட் வவுச்சர்’ கார்கில்ஸ் நிறுவனம் வழங்குகின்றது என தெரிவித்து போலி கார்கில்ஸ் நிறுவனத்தின் பெயருடன் பேஸ்புக்கில் போலி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்திற்கு 62 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்குமாறு பேஸ்புக்கில் காசு கட்டப்பட்டு பகிரப்பட்டுள்ளது . மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து பார்த்த போது அதில் பேஸ்புக் பயனாளிகளின் கிறடிட் காட் மற்றும் டெபிட் காட் தொடர்பான விபரங்களை தருமாறு கேட்டதால் அலேட்டான அவர், உடனடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள கார்கில்ஸ் நிறுவனத்திற்கு தொலைபேசி எடுத்துள்ளார். அங்குள்ளவர்கள் குறித்த நிறுவனத்தின் மனேஜர் என கூறி 0763679143 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். உடனடியாக குறித்த ஊடகவியலாளர் அந்த இலக்கத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த போலி நிறுவனம் தொடர்பாக அந்த இலக்கத்திற்குரிய முகாமையாளர் என கூறப்பட்டவருக்கு தெரவித்து அது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்க முடியுமா? என கேட்ட போது, கார்கில்ஸ் நிறுவன முகாமையாளர் என கூறப்பட்ட நபர் ”உனக்கு வேறு வேலையில்லையா? பேஸ்புக்கில் வாறதுகளுக்கெல்லாம் ஏன் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் கொடுக்க வேணும்…. நித்திரையில் கிடக்கும் போது என்னை எழுப்பி ஏன் தேவையில்லாத வேளை பார்க்கின்றாய் எனவும் மேலும் பல தகாத வார்த்தைகளாலும் தரக்குறைவாக ஏசி தொலைபேசியைக் கட் பண்ணியுள்ளதாக குறித்த ஊடவியலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

