மனைவிக்குப் பயந்து யாழ் அரச அதிபர் தொடர்பான பேஸ்புக் பதிவை அழித்த ருசாங்கன்!
யாழ் அரச அதிபர் பிரதீபன் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் பிரமிட் நிறுவனமான குளோபல் லைவ் லங்கா மற்றும் பல பிரமிட் நிறுவனங்களின் முக்கிய சூத்திரதாரி என்பது பிரதீபனால் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் ஏராளமான அப்பாவி அரச ஊழியர்களுக்கு தெரிந்த விடயம். உயரதிகாரியாக இருக்கின்றதால் அதை வெளிப்படுத்தினால் தாம் பழி வாங்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் லட்சக்கணக்கான காசை பறி கொடுத்து ஏமாந்து நிற்கின்றார்கள் குறித்த அரச ஊழியர்கள். பிரதீபனுடன் சேர்ந்து இன்னும் பல அரச உயரதிகாரிகள் குறித்த பிரமிட் திட்டத்தில் சேர்ந்து தமக்கு கீழ் இருந்த ஊழியர்களையும் அதில் சேர்த்து பெருமளவு பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். பிரதீபன் கோப்பாய் பிரதேசசெயலராக இருந்த போதும் மேலதிக அரச அதிபராக இருந்த போதும் இந்த நிறுவனத்தின் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார். கச்சேரியில் தனது அலுவலக அறைக்குள் இதற்காக கணனிகளை வைத்து கணனி பிரயோக உத்தியோகத்தர்களையும் இந்த நிறுவனத்தின் பிராடு வேலைக்காக பயன்படுத்தியிருந்தார்.
தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயருமான இம்மானுவேல் ஆர்னோல்ட் பகிரங்கமாக குறித்த நிறுவனத்தை கந்தர்மடம் சந்திக்கு சற்று தொலைவில் பலாலி வீதியில் திறந்து வைக்கும் அளவுக்கு அந்த நிறுவனத்தின் மாபியாக்கள் மிகக் கொடூரமான செயற்பாட்டில் ஈடுபட்டு மக்களின் பணத்தை சுரண்டி ஏமாற்றினார்கள். இந்த சட்டவிரோத நிறுவனத்தை திறந்து வைப்பதற்காக ஆனோல்ட்டுக்கு அந் நேரமே 15 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஊடகவியலாளர்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளையும் தங்களின் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுத்தி குறித்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கான யாழ் மக்களின் பணத்தை கொள்ளையிட்டார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என அறிந்து பல அப்பாவிகள் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற போது அந் நேரத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களை துரத்தினார்கள். தற்போதும் பணத்தை இழந்தவர்கள் கடும் விரக்தியில் காணப்படுகின்றார்கள்.
இந் நிலையில் ஈ.பி.டி.பி அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளராக இருந்த கோடீஸ்வரன் ருசாங்கன் இந்த பிரமிட் தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டிங்கை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு “ பலவருடங்களுக்கு முன்னரே குடும்பமாக இணைந்து இதை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி மோசடிக்கு வித்திட்டவர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் அதி உயர் பதவிகளில் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்” என பதிவிட்டிருந்தார். அவர் குறித்த பதிவை பதிவிட்ட பின் அவரது பதிவை அப்படியே ஸ்கிறீன் சொட் எடுத்து யாழ் அரச அதிபரின் திருவிளையாடலை வெளிப்படுத்தியிருந்தோம்.
ஆனால் நாம் அந்த ஸ்கிறீன் சொட் எடுத்து செய்தி வெளியிட்டு ஓரிரு மணித்தியாலங்கயில் ருசாங்கன் குறித்த பதிவை அழித்துவிட்டார். காரணம் யாழ் அரச அதிபர் பிரதீபனின் மனைவியின் தங்கை கணவனே ருசாங்கன். ஆகவே தனது மனைவியின் கோப ஆவேச தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாது அவர் அவ்வாறு செய்திருக்கலாம். ஏனெனில் ஏராளமான யாழ்ப்பாண ஆண்கள் மனைவியின் கோபத்திற்கு எப்போது அடிமையானவர்கள். அந்த வகையில் ஈ.பி.டி.பி ருசாங்கனும் மனைவிக்கு கட்டுபடப்டிருக்கலாம் என கருதமுடிகின்றது. அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு அழித்த பதிவின் ஸ்கிறீன் சொட்டை இங்கு தந்துள்ளோம்….


