99 வயது வயோதிபப் பெண் உட்பட்ட இருவர் கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுறுதி!
கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 99 வயதுடைய மரியதாஸ் அன்னம்மா என்றும் மற்றையவர் 51 வயதுடைய தோமஸ் கொலின்ஸ் ரீவன் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
