Home புதினங்களின் சங்கமம் யாழில் எலிக் காய்ச்சலுக்கு பாமசியில் மருந்தெடுத்து பாவித்து வந்த இளைஞன் பலி!!

யாழில் எலிக் காய்ச்சலுக்கு பாமசியில் மருந்தெடுத்து பாவித்து வந்த இளைஞன் பலி!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பெயரில் உள்ள சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு எலிக்காய்சலினால் (லெப்ரோபைரோசிஸ் Leptospirosis) என சந்தேகிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 23 வயது இளைஜன் நேற்று மரணம்.
இவர் 5 நாள் காய்ச்சலுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் நோய் தீவிரமான நிலையில் அனுமதிக்கப்பட்டவர் .
இவர் வாழ்ந்த பகுதியில் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் எலிக்காய்சலினால் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
அத்தோடு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தினை உட்கொள்ளவில்லை .
அத்துடன்
காய்சலுக்காக இரு வேறு பாமசியில் (pharmacy )இரு தடவைகள் மருந்தினை எடுத்துள்ளார். (மருத்துவ ஆலோசனை இன்றி வைத்தியர்களின் சிபாரிசுகள் இன்றி மருந்துகளை எடுத்துள்ளார்)
மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எனவே காய்ச்சல் ஏற்படின் 24 மணிநேரமும் அருகிலுள்ள வைத்தியசாலையை வைத்திய ஆலோசனைக்காக நாடவும்.