புதினங்களின் சங்கமம்

16 பயணிகளுடன் சென்ற வேன் விபத்து.இருவர் மரணம் ,14 பேர் வைத்தியசாலையில்.

ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இதன் போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.