புதினங்களின் சங்கமம்

புலமைப் பரிசில் பரீட்சையில் 10 மாணவர்களுக்கு 200 புள்ளிகள்!! 15 மாணவர்களுக்கு முட்டை (பூச்சியம்)!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இரத்தினபுரி, எஹெலியகொட ஆரம்ப பாடசாலை மாணவி செனுடி தம்சர ஹகுமுவ மன்ன, காலியின் சங்கமித்த கல்லூரியின் மாணவி சியாதி வித்தும்ச கருணாதிலக, இங்கிரிய சுமனஜோதி கல்லூரியின் மாணவி தேவ்லி யசஸ்மி, எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் மாணவன் டோவிந்து சிரஞ்சித், பண்டாரகம தேசிய பாடசாலையின் மாணவன் இந்துத சஸ்மித குணதிலக, திம்புலாகல சிறிபுர ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த மாணவன் தேனுஜ மனுமித பண்டார ஹேரத், மருதானை சாஹிரா கல்லூரியின் மாணவன் ஃபார்சன் முகமது அமர், தங்காலை மாதிரி ஆரம்பப் பாடசாலையின் தசிந்து கவிஷன், கண்டி பெண்கள் உயர்நிலைப் பாடசாலை மாணவி எஹோர யெத்மினி எப்பா, அக்குரஸ்ஸ தர்மபாலா வித்யாலயத்தின் மாணவர் சிஹாத் சாண்டினு ஆகியோர் 200 புள்ளிகளை பெற்றனர்.

இவர்கள் அனைவரும் சிங்கள மொழி மூலமாக பரீட்சைக்கு தோற்றியவர்கள்.

புலமைப்பரிசில் பரீட்சை வரலாற்றில் முதன்முறையாக 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இதேவேளை, நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 15 மாணவர்கள் எந்த புள்ளியையும் பெறவில்லை. அவர்களின் பெறுபேறு பூச்சியம்.