Home புதினங்களின் சங்கமம் யாழ் மாநகரசபையில்  ஊழல், பொம்பிளை சோக்குப் புரிந்த சீராளன் சாவகச்சேரி நகரசபையில் திருவிளைாடல்!!

யாழ் மாநகரசபையில்  ஊழல், பொம்பிளை சோக்குப் புரிந்த சீராளன் சாவகச்சேரி நகரசபையில் திருவிளைாடல்!!

யாழ் மாநகரசபையில் உதவி ஆணையாளராகக் கடமையாற்றிய போது ஊழல் மற்றும் பொம்பிளை உத்தியோகத்தர்களுடன் லீலைகள் புரிந்து வந்த சீராளன் தற்போது சாவகச்சேரி நகரசபையில் தனது திருவிளையாடல்களை அரங்கேற்றிய வண்ணம் உள்ளான். சீராளன் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தான் வந்தவன் என கூறி தன்னை பழிவாங்க முற்படுகின்றார்கள் என அப்போதய ஆளுநர் மற்றும் உயர் அதிகாரத்தரப்புக்களிடம் கூறி அனுதாப அலையைப் பெற்று மாநகரசபை லீலைகளிலிருந்து தப்பிப்பிழைத்திருந்தான். அதன் பின்னர் வடக்கு மாகாண ஆளணிப்பயிற்சி நிர்வாகியாக சென்று அங்கும் ஊழல் மற்றம் பொம்பிளை லீலைகள் பரிந்து விசாரணைக்க்கு உள்ளாகி சாவகச்சேரி நகரசபைக்கு மாற்றம் பெற்றான்.

சாவகச்சேரி நகரசபை பணம் கொழிக்கும் இடமாக இருப்பதை அறிந்து கட்டடம் அமைப்பதற்கு லஞ்சம் பெறுவதிலிருந்து அனைத்திலும் லஞ்சம் பெற்றுக்கொண்டு வந்திருந்தான். அண்மையில் சாவகச்சேரி நகரசபைக்கு சொந்தமான நுாலகப்பிரதேசத்தில் வைத்து குறித்த நகரசபை ஊழியர்கள் சிலர் கள்ள மாடு ஒன்றை அறுத்து நுாலகத்திற்குள் வைத்து பங்கிட்டு அதனை சீராளனுக்கும் கொடுத்து பிடிபட்டிருந்ததாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் இன்று சீராளனுக்கு எதிராக சாவகச்சேரி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளார்கள். சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதியை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கடைகளின் வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் , வழங்க வேண்டும் என கோரி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சாவகச்சேரி நகர சபைக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது.கடை தொகுதியை புதிதாக நிர்மாணிக்க தொடங்கிய போது, கடந்த 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த நிலையில் உள்ள வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்க பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.இதனையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர்.இதனால் நுழைவாயிலில் அமர்ந்து இருந்தவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.இதன்போது நகராட்சி மன்ற வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி, கழிவகற்றும் உழவியந்திரத்தை போராடியவர்கள் மீது மோத முயற்சித்ததோடு, அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

குறித்த கேள்வி கோரலை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி பிரதான நுழைவாயிலை மறித்து போராடிய நிலையில் போராட்டத்தினை தலைமை தாங்கிய முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த கேள்வி கோரலால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவதால், உள்ளூராட்சி வடமாகாண ஆணையாளருடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வரை குறித்த கோரப்பட்ட கேள்வி அறிவித்தல் பத்திரங்களை உரிய தினத்தில் திறப்பதினைத் தவிர்த்து,அவற்றினை உறை நிலையில் வைக்குமாறு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரினால் நகரசபை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கையளிக்கப்பட்ட நிலையில் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.