Home புதினங்களின் சங்கமம் யாழில் வீதியோரமாக நின்ற அப்பா, மகன் மீது பேரூந்து மோதியதில் அப்பா பலி!!

யாழில் வீதியோரமாக நின்ற அப்பா, மகன் மீது பேரூந்து மோதியதில் அப்பா பலி!!

யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவரை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியை சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (வயது 76) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தவரும் , அவரது மகனும் வீதியோரமாக இருந்துள்ளனர்.

அவ்வேளை வீதியில் பயணித்த பேருந்து இருவரையும் மோதியுள்ளது. அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , தந்தை உயிரிழந்துள்ளார். மகன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தினை அடுத்து , பேருந்து சாரதி பேருந்தை விபத்து நடைபெற்ற இடத்தில் கைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.