வடக்கு ஆளுநரின் செயலாளர் நந்தகோபன் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஏன் பெண் உத்தியோகத்தரை நியமிக்க முற்பட்டார்?
வடக்கு ஆளுநராக நா.வேதநாயகம் நியமிக்கப்பட்டவுடன், ஆளுநரின் செயலாளராக இருக்கும் நந்தகோபன் சில செயற்பாடுகளை அவசர அவசரமாக நடாத்தி முடித்தார். அவற்றில் முக்கியமானது தனது அலுவலகத்தில் இருந்து 3 பேரை இடமாற்றியமை. ஒரு பெண் நிர்வாக அதிகாரி, ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர், ஒரு சாரதி ஆகியோர் உடனடியாக இடமாற்றப்பட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்ட பின் குறித்த இடமாற்றங்கள் மேற்கொள்வது சட்டத்திற்கு முரணானது எனத் தெரிந்திருந்தும் 3 பேரும் அங்கிருந்து அகற்றப்பட்டார்கள். அதே நேரம் இன்னொரு பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தனது அலுவலகத்தி்ற்கு நியமிப்பதற்காக நடவடிக்கையும் எடுத்தார் நந்தகோபன். தன்னுடன் ஏற்கனவே பல அலுவலகங்களில் கடமை புரிந்த தனது நெருக்கத்திற்கு உரியவர்களையே ஆளுநர் அலுவலகத்திற்கும் நியமித்து உள்ளார் ஆளுநரின் செயலாளர் நந்தகோபன். அவர்கள் மூலமாக பல சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்ளவே தனக்கு நெருக்கமானவர்களை அவர் தன்னுடன் கடமையாற்ற அழைப்பது வழக்கம் என அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையில் குறித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தரும் நந்தகோபனின் தவறான செயற்பாடுகளுக்கு ஒத்தாசை புரிவதற்காகவே தேர்தல் காலத்தையும் கருதாதது ஆளுநர் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. நந்தகோபன் தீவக திணைக்களம் ஒன்றில் உயர் அதிகாரியாகக் கடமையற்றும் போது குறித்த பெண் உத்தியோகத்தர் அவருடன் நெருக்கிச் செயற்பட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்தே அந்த உத்தியோகத்தரை தற்போதய ஆளுநர் அலுவலகத்தில் நியமிக்க நந்தகோபன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


