புதினங்களின் சங்கமம்

அம்பாறையில் இரண்டு இராட்சத மீன்கள் கரை ஒதுங்கிய காட்சிகள்!!!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலையில் 18 நீளமான இராட்சத சுறா மீன் சிக்கியுள்ளது.

இன்று காலை குறித்த மீன் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வழமைபோல கரைவலை இழுத்த மீனவர்கள் இழுக்கமுடியாத அளவிற்கு சுமையை உணர்ந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அந்தப் பகுதியில் நின்றிருந்த ஏனைய மீனவர்கள், கிராமத்து மக்கள் இணைந்து கரைவலையை இழுத்து கரை சேர்த்தபோது சுறாமீன் சிக்கியிருப்பது காணப்பட்டுள்ளது.

குறித்த மீனின் நீளம் 18 அடி வரையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2000 கிலோக்கிராம் எடைகொண்ட குறித்த மீனின் பெறுமதி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை அரிய வகை மீனினம் குறித்து சமூக ஆர்வலர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கரைவலை உரிமையாளரால் மீன் மீளவும் கடலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதடையே அம்பாறை பொத்துவில் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கோமாரி 2 பிரதேசத்தில் அரியவகை நீலத்திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.