புதினங்களின் சங்கமம்

சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் ; முடிந்தால் வழக்கு என் மீது வழக்கு தொடரட்டும்

சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என  சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

 சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன்.

மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது.

சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்.

மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர். தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன்.

இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.