புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் அங்கிள் யாழ் வங்கி ஒன்றில் நடாத்திய திருவிளையாடல் காட்சிகள் இதோ!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்...

லண்டன் எவ்வளவு பெரிய சிட்டி தெரியுமா? அங்க இருந்து வந்த அல்பேர்ட் ஐன்ஸ்டீனை அரை மணித்தியாலம் காக்க வச்சு அவர் அடுத்ததாக கண்டுபிடிக்க இருந்த நோபல் பரிசு பெறப்போகும் அரிய கண்டுபிடிப்பை தடை செய்த வங்கி ஊழியர்களுக்கு கண்டனம்.
லண்டனில் கோப்பி வாங்க போனாலே அரை மணித்தியாலம் லைனில் நிக்கனும்டா. வங்கியில போய் இப்படி சத்தம் போட்டா அரைமணித்தியாலத்தில வந்து பொலிஸ் அள்ளிட்டு போயிருக்கும். லண்டனில் என்றால் மாமா நாலா மடிஞ்சு நிற்பார்.
இது தடிப்பெடுத்த தனம். ஊரில் என்றால் கெத்து காட்டி, சந்தில நின்று ரவுடித்தனம் பண்ணி திரியலாம் இந்த நாட்டில் ஒரு நாயும் தன்னை கணக்கெடுக்குது இல்லை என்ற ஏக்கத்தை அகதி கெடு முடிந்து இலங்கை பாஸ்போர்ட் எடுத்ததும் போய் அப்பாவி ஊழியர்களிடம் இப்படி கொட்டுகிறார்.
இதில் முகாமையாளர் மிகத் தெளிவாக சொல்கிறார், “1200 பவுணட்ஸ் அதை செக் பண்ண 15 நிமிடத்துக்கு மேல் எடுக்கும்”
அத்தனை பணத்தாள்களையும் கள்ள நோட்டா நல்ல நோட்டா என செக் பண்ண வேண்டியது வங்கியின் கடமை தானே. அதையும் விட ஒரு பெரிய தொகை வெளிநாட்டு பணத்தை மாற்றும்போது வங்கி செய்ய வேண்டிய கடமைகளுக்கு உண்மையில் அரை மணித்தியாலம் தேவைப்படும் தானே?
இதில் பாராட்டப்பட வேண்டியவர்கள் அந்த வங்கி ஊழியர்கள்.எவ்வளவு பொறுமையாக கையாள்கிறார்கள்.
குறித்த வங்கி, அந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலுக்காக அவர்களை சப்போர்ட் பண்ண வேண்டும் . நிலமையை சரியாக கையாண்டதற்காக பாராட்டி நன்கொடை வழங்க வேண்டும்.
முக்கியமாக தடிப்பெடுத்த இந்த வெளிநாட்டு பூமர் நாட்டில் இருந்தால் பொலிசில் பிடிச்சு போட வேண்டும்.