புதினங்களின் சங்கமம்

குருநாகல் மகப்பேற்று மருத்துவர் ஷாபி சிகாப்தீனை பிணையில் விடுவித்தது நீதிமன்றம்!!

குருணாகல் தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவர்  பிணையில் விடுவித்து குருணாகல் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது. குருணாகல் தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவர் ஷாபி சிகாப்தீனை பிணையில் விடுவித்து குருணாகல் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது. 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா காசுப் பிணை மற்றும் 2.5 மில்லியன் பெறுமதியான 4 ஆள் பிணையில் மருத்துவர் ஷாபியை விடுவிக்க குருணாகல் நீதிவான் கட்டளை வழங்கினார்.

தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும், அளவுக்கதிகமான சொத்துக்களை சேகரித்துள்ளார் என்ற சந்தேகத்திலும், குருணாகல் தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவர் ஷாபி சிகாப்தீன் கைது செய்யப்பட்டிருந்தார். குருணாகல் தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவர் ஷாபி சிகாப்தீனை பிணையில் விடுவித்து குருணாகல் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது. அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாத முற்பகுதியில் குருணாகல் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
அதனால் அவரது தடுப்புக்காவல் கட்டளை நீக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க குருணாகல் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் மருத்துவர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிரான வழக்கு குருணாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில் மன்றில் பிணை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க அரச சட்டவாதி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

மருத்துவர் ஷாபி சிகாப்தீன் சார்பான பிணை விண்ணப்பம் மீதான கட்டளை இன்று மாலை 6.45 மணியளவில் குருணாகல் நீதிமன்ற நீதிவான் வழங்கினார்.மருத்துவர் ஷாபி இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சூழ பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதேவேளை, மருத்துவர் ஷாபி சிகாப்தீன், 8000இற்கும் அதிகமான சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில், மருத்துவர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக சுமார் 600 பெண் முறைப்பாடுகளைச் செய்தனர்.

இதனால், மருத்துவர் ஷாபி சிகாப்தீன் மகப்பேற்று அறுவைச் சிகிச்சையின் போது, பெண்களின் கருவுறும் தன்மையை இழக்கச் செய்தாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் சட்டவிரோத கருத்தடையை மருத்துவர் ஷாபி சிகாப்தீன் செய்தார் என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளின் பின்னர் தெரிவித்திருந்தனர்.

சுகாதார அமைச்சும் சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மருத்துவரால் மகப்பேற்றின் போது, சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.