புதினங்களின் சங்கமம்

ஈஏஸ்பி நாகரத்தினத்தின் பெடியனின் திருவிளையாடல் இதுதான்!!

எச்சில் கையால காகம் கலைக்காதவன் காரைநகரான் என்பது யாழ்ப்பாணத்திற்கே உரிய பழமொழி… (இது காரைநகர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனாலும் பறவாயில்லை…) அந்த தீவில் இருந்து வந்த ஒருவர்தான் ஈ.எஸ்.பேரம்பலம் நாகரத்தினம். யாழ் நகர்ப்பகுதியில் கஜமுகன் காட்வெயர் மற்றும் சைக்கிள் விற்பனை நிலையம், மற்றும் பல நிறுவனங்கள் என நுாறு கோடிக்கும் அதிகமான அசையும் அசையாச் சொத்துக்களை யாழ்ப்பாண மக்களிடமிருந்து உறிஞ்சி எடுத்த பணத்தின் மூலம் சேர்த்து வளர்ந்த பெருமை நாகரத்தினத்தைச் சாரும். தான் சம்பாதிக்கும் சொத்துக்களுக்கு வரி கட்டாது விடுவதற்காக பல்வேறு அறக்கட்டளைகளை பினாமிகள் பெயரில் வைத்து அதனுாடாக பொதுமக்களுக்கு சேவை செய்வது போல் பாவனை காட்டி ஏராளமான கறுப்புப் பணத்தை தன்னகத்தே கொண்டுள்ளார் நாகரத்தினம். தற்போது தனது மகனான கமலரூபனை சுயேட்சையாக நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்கியுள்ளார் நாகரத்தினம்.

ஆக மிஞ்சிப் போனால் 3 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் எடுக்க முடியாது என்று தெரிந்தும் நாகரத்தினம் தனது மகனை தேர்தலில் இறக்கியது ஏன்?

யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் பெருமளவானோர் எதற்காக சுயேட்சைக் குழுக்களாக தேர்தலில் களம் இறங்குகின்றார்கள் என்பதற்கு பல பின்னணிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தேர்தல் செலவு என கூறி தாம் சம்பாதிக்கும் பெரும்மளவான பணத்திற்கு வரி கட்டாமல் கணக்கு காட்டுவதும் ஒன்றாகும். தற்போது ஈ.எஸ்.பேரம்பலம் தனது மகனை தேர்தலில் இறக்கி தனது மகனுக்கான தேர்தல் செலவு என கூறி பல கோடிரூபாக்களை கணக்குக்காட்டி வரியை கட்டாமல் விடுவதற்காக தந்திரமே நாகரத்தினத்தின் பெடியன் தேர்தலில் இறங்கியதற்கு காரணம். தற்போது வரி கட்டாமல் பேய்க்காட்டுபவர்களை அரசாங்கம் கழுத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் நாகரத்தினம் தனது திருவிளையாடலை சிறப்பாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாகரத்தினத்திடம் இருக்கும் பணத்தை வைத்து யாழ்ப்பாணத்தை தனி ஒருவனாகவே முன்னேற்ற முடியும். தேர்தலில் மகனை நிறுத்தித்தான் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியமில்லை. நாகரத்தினத்தின் மகனை பல கட்சிகள் தம்முடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுமாறு கோரியும் நாகரத்தினம் அதற்கு சம்மதிக்கவில்லை. காரணம் தேர்தலில் சுயேட்சையாக நின்று இத்தனை கோடி செலவு செய்தோம் என்று தேர்தல் திணைக்களக்களத்திற்கு கணக்கு காட்டுவது போல் வேறு கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டால் கணக்கு காட்ட முடியாது.

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் 90 வீதமான புத்திசாலிகள் வாழ்ந்து வந்தார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது 10 வீதமான புத்திசாலிகள் மாத்திரமே வாழ்ந்து வருவதாகவும் அந்தப் புத்திசாலிகளில் 8 வீதமானவர்கள் காரைநகரைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அந்த 8 வீதமானவர்களாலேயே ஏனைய 90 வீதமான புத்திசாலிகளும் முட்டாள்களாக மாறினார்கள் என்றும் அனுபவப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.