காமம் வரும் போது மனிதன் தன்னை மறப்பது ஏன்? பரபரப்பு தகவல்கள்!!
இப்படியான பதிவுகள் வந்தவுடன் உடனே வந்துடுவீர்கள் என தெரியும்… எந் நேரமும் எங்கட அரசியல்கட்சிகளின் செயற்பாட்டால் ரென்சனில் திரியும் வாசகர்களான உங்களுக்கு றிலாக்ஸ் பண்ணுவதற்காக சமூகவலைத்தளத்தில் வந்த இந்தப் பதிவினை தந்துள்ளோம்… வாசித்து விட்டு கட்டாயம் மீண்டும் எங்களை நினைத்தும் ரென்சன் ஆகுவீர்கள் எனத் தெரியும்… இருந்தாலும் வாசியுங்கள்…
ஒரு பாலியல் நூல் படித்தேன். காமம் என வரும்பொழுது மனிதன் தன்னை மறந்து, தன் சூழ்நிலை மறந்து, எந்த வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு காம சிந்தனைக்குள் மூழ்கி விடுவான் என அதில் இருந்த ஒரு ஆய்வு குறிப்பு சொன்னது.
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இது உண்மையாக இருக்குமா? என யோசித்தபோது, சந்தேகம் இருந்தால் மற்றவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி சோதித்துப் பார் என அதில் நூலின் பின்பக்க அட்டையில் எழுதி இருந்தது.
சரி! இப்போது ஒரு குஜால் கதைக்குப் போவோம்..!
ஜப்பானில் ஒரு இளம் தம்பதியர். திருமணமானதிலிருந்து ஒவ்வொரு நாளும் விதம் விதமாக தாம்பத்தியம் அனுபவித்தனர். ஆயகலைகள் 64ஐயும் படுக்கை அறையில் தாண்டிச் சென்றது அவர்களின் இளமை லீலைகள்.
திடீரென ஒருநாள் தாம்பத்ய இன்பத்தை இரவு முழுவதும் நீண்ட நேரம் அனுபவிக்க என்ன வழி என அவர்களுக்குள் காரசாரமாக பேச்சு எழுந்தது.
தான் படித்திருந்த பல பாலியல் நூல்களை நினைவில் கொண்டுவந்து இளம் மனைவியின் கன்னங்களை தடவிக் கொண்டே கணவன் உற்சாகமாக சொன்னான்,
“சுகிதாக்கி! மொஜிதாக்கா ..!”
சடாரென அவனின் கைகளை தட்டி விட்ட மனைவி வேகமாக தலையை ஆட்டி மறுத்து பேசினாள்,
“கோவானி நீ! மோவி ஜனக்பா”
அதைக் கேட்டதும் கணவனுக்கு சுரீரென கோபம் வந்தது. இருந்தாலும் கோபத்தை அடக்கி காமத்தோடு பதில் சொன்னான்,
“டோக்கா ஆ அஞ்சி ரோடி ரௌமி யாக்கோ”
இளம் மனைவி அவன் மேல் சாய்ந்து வெட்கப்பட்டுக் கொண்டே அவன் காதிற்குள் மெலிதாக காதலுடன் கிசுகிசுத்தாள்,
“நா மியாவோ கைனா டிம் கௌஜி…!”
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை நண்பர்களே!
ஜப்பான் மொழி தெரியாவிட்டாலும் தாம்பத்ய இன்பத்தை நீண்ட நேரம் நீட்டிப்பது குறித்து அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஒரு வரி விடாமல் நீங்கள் இந்தப் பதிவை படித்தது…
பாலியல் சிந்தனை வரும்போது மனிதன் தன்னிலை மறக்கிறான் என அந்தப் பாலியல் ஆய்வு சொன்னது சரிதான் என்பதை நிரூபித்திருக்கிறது.
பாலியல் எண்ணப் பரிசோதனைக்கு உங்களை உட்படுத்தியதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! விசயம் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக்கோங்க!!