மன்னார் நீதிபதிக்கு எதிராக மதில்களில் நோட்டிஸ் ஒட்டியது சிறி ரங்கவா? பொலிசார் கைது செய்ய சென்ற போது ஓடித் தப்பினார்!! பரபரப்பு தகவல்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறி ரங்கா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டிய சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சிறி ரங்கா என வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரங்காவை கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தலைமறைவாகி உள்ளதாக கடந்த வழக்கின் போது குற்றவியல் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மன்றில் கூறினர். இவ்வாறான நிலமையிலேயே தன்னை கைது செய்தால் பிணையில் விடுதலை ஆகுவதற்காக சிறி ரங்கா தனது சட்டரதணி ஊடாக முன் பிணை கோரி கட்ந்த 9ம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை 16ம் திகதி நடைபெறவுள்ளது. அன்றய தினம் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.