தமிழரசு கட்சி ஆதரவாளர்களே!! மாம்பழம் சின்னத்துக்கு ஒரு குத்து! வீட்டுக்கு ஒரு குத்து!! மாவை கூறுவாரா?
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாவை சேனாதிராசா வாக்களித்தபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது தான் ரணிலுக்கும், சஜித்துக்கும், அரியத்தாருக்கும் விருப்பு வாக்குகளை இட்டதாக பெருமையாகச் சொன்னார்.
தற்போது தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களும் மாவையைச் சந்தித்துள்ளனர். ஏற்கனவே தமிழரசுக்கட்சி சிறிதரன் மாவையை சந்தித்து காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெற்றிருந்தார்….
ஆகவே மாவை வஞ்சகம் பாராது வீட்டுக்கும் மாம்பழத்திற்கும் புள்ளடி போட்டு தனது ஆதரவாளர்களையும் ஊக்குவிப்பாரா?
ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்துடன் , மாம்பழங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அந்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்கி, மாவை சேனாதிராசாவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ. சரவணபவன் , வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் மாம்பழ சின்னத்திலையே தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)

