புதினங்களின் சங்கமம்

உமா அக்காவை கழற்றி விட்டதா ரெலிபோன் கட்சி!! யாழில் களமிறங்குகின்றார் சந்திரகுமார்!!

யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பு மனுத்தாக்கல் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் இவ் வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் சமத்துவக் கட்சி கூட்டணியாக 2024 பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதனடிப்படையில் சமத்துவக் கட்சியின் சார்பில் நான்கு வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஐந்து வேட்பாளர்களும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் முதன்மை
வேட்பாளராகவும், இராசதுரை அந்தோனி ஆனந்தராஜா, துலேஜனா முகுந்தன், செல்வராசா தயாகுலன் ஆகியோர் சமததுவக் கட்சி சார்பாகவும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக ஐந்து பேரும் போட்டியிடுகின்றனர்.

இதே வேளை ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் கட்சியின் பிரதான முக்கியஸ்தராக இருந்த உமாச்சந்திரபிரகாஸ் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அவர் சந்திரகுமாரின் அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து விலகிவிட்டார் எனவும் அவருக்கு தேசியப்பட்டியல் எம்.பி கொடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.