சவூதி அரேபியாவில் வேலைக்குச் சென்று இலங்கை திரும்பிய செல்வியின் வயிற்றுக்குள் இரும்பு ஆணிகள்!! கொடூர சித்திரவதை!!
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சென்ற இலங்கை பெண்ணுக்கு உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கான்கிரீட் ஆணிகள் மற்றும் ஒரு துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிரிங் துண்டு என்பன உண்ட நிலையில் அவரது வயிற்றுக்குள் அவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.சவூதி அரேபிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் தூதரகத்தின் ஊடாக இந்த வீட்டுப் பணிப்பெண் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.மாத்தளை அல்கடுவ தேயிலை தோட்டத்தில் வசித்து வந்த எம்.எஸ்.தியாக செல்வி என்ற இருபத்தொரு வயதுடைய ஒரு பிள்ளையின் தாயார் சவுதி அரேபியாவின் Taid பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.தனது மகளுக்கு நேர்ந்த இந்த குற்றம் தொடர்பில் அவரது தாயார் திருமதி தியாகு குமாரி வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினூடாக சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்காகச் சென்றதாகவும் அங்கு பணிபுரிந்த இந்தப் பெண்ணிற்கு அதன் உரிமையாளர் உணவு, பானங்கள் வழங்கப்படாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தெரிவித்துள்ளார்.வீட்டில் அவரது தாயும் சேர்ந்து அவளை கொடூரமாக அடித்து, கான்கிரீட்டிற்கு பயன்படுத்தப்படும் ஐந்து வெள்ளை இரும்பு கம்பிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.உணவுக்குப் பதிலாக ஆணிகளை விழுங்க மறுத்ததால், கடுமையான அடியும் கொடுத்ததால் வேதனை தாங்க முடியாமல் இரும்பு கம்பியை விழுங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.