புதினங்களின் சங்கமம்

நோய்க்கு மருந்தே எடுக்காத கிறீஸ்தவ சபை போல் செயற்படும் சைக்கிள் கட்சியின் வேட்பாளர்கள் இவர்கள்தானாம்……

பெந்துக்கோசு… எக்காளத்தொனி போன்ற கிறீஸ்தவ சபைகளைச் சேர்ந்தோர் உயிர் போகும் நிலை வந்தாலும் தமது கொள்கைகளை மாற்றாமல் இருப்பார்கள். குறிப்பாக அவர்களின் கொள்கைகளில் ஒன்றான வைத்தியசாலைக்குப் போய் இரத்தம் மாற்றுதல் சிகிச்சைகள் எடுக்க கூடாது என்பதற்கு இணங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை எடுக்காது இருப்பார்கள். இதனால் அவர்களில் சிலர் மரணமாகியும் உள்ளார்கள். இவ்வாறான உலக நடைமுறைக்கு ஒவ்வாத சில செயற்பாடுகள் குறித்த கிறீஸ்தவ சபைகள் சிலவற்றில் காணப்படும்.

அவ்வாறன ஒரு கிறீஸ்தவசபையைப் போன்றவர்கள்தான் இந்த சைக்கிள் கட்சியினர். புலிகள் அமைப்பு கடைப்பிடித்து வந்த தமிழ்த்தேசியம் என்ற கொள்கையை இப்போதும் மாற்றாது அதுவே தமது கொள்கை என்று கூறி தற்போதைய சூழ்நிலை நடைமுறைக்கு ஒவ்வாத செயற்பாட்டை செய்து வருவதாக பலராலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர் சைக்கிள் கட்சியினர்.

குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களிடத்தில் ஊழல் மோசடிகள், அரச சலுகைகளுக்காக சோரம் போதல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றாலும் தம்மை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்களை உடனடியாக துரோகிப்பட்டம் கொடுத்து சிறப்பிப்பது இவர்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இதனால் இவர்களது ஆதரவாளர்கள் பலர் தற்போது குறித்த கட்சியை விட்டு கழன்று சென்றுவிட்டார்கள்.

இந் நிலையில்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வேட்புமனு பத்திரத்தை தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு முன்பாக வைத்து, வணங்கினார்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் செல்வராஜா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், செபஸ்ரியாம்பிள்ளை மேவிஸ் ஜீன்சியா, மகாதேவன் நடனதேவன்,கனகரட்னம் சுகாஷ், வாசுகி சுதாகர், கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், தங்கவேல் ஜெகதீஸ்வரன், ஞான குணேஸ்வரி கமலச்செல்வம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.