சற்று முன் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைக்கப்பட்டன!!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
p>ஒக்டேன் 92 ரக பெற்றோல் 21 ரூபாவினால் குறைக்கப்பட்டு 311 ரூபாவாகவும் ஓட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு 283 ரூபாவாகவும் டீசல் 33 ரூபாவால் குறைந்து 319 ரூபாவாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் 19 ரூபாவால் குறைந்து 183 ரூபாவாக உள்ளது. பெற்றோல் 95 இன் விலையில் மாற்றம் இல்லை.

