புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில்பட்டதாரிகள் நியமனத்தில் பெரும் குளறுபடி!! நடப்பது என்ன??

ஜூலை இறுதியில் பட்டதாரி பயிலுனர்களாக அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்
சேவைக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இணைத்துக் கொள்ளப்படவுள்ளோரின்
பட்டியலில் கடந்த ஆண்டு பயினர்களாக நியமனம் பெற்றவர்கள் பலரின் விவரங்களும்
உள்ளடக்கப்பட்டுள்ளன.

16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜூலை 29,30 மற்றும் 31ஆம் திகதிகளில் அரச
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி நிலை நியமனம் வழங்கப்படவுள்ளது. பிரதமரின்
அலுவலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்படும் என்று பொது நிர்வாக
அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட
ஆயிரத்து 253 பேரின் பெயர் விவரங்கள் இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக
அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக பட்டதாரி பயிலுனர்களாக அரச சேவைக்குள் இணைத்துக்
கொள்ளப்படுவோர் எனக் குறிப்பிட்டு பிரதேச செயலக ரீதியாக விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ளன.

அதில் முதல் கட்டமாக 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதி 372 பேர்
சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களில் பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனால் பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

No photo description available.  No photo description available.