அநுராவா? சஜித்தா? பெருந்தொகை பணம், வாகனம் மற்றும் தங்க நகை பந்தயம்! எங்கே நடந்தது?
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பெருந்தொகை பணத்தை பந்தயம் வைத்து, வெற்றியீட்டிய பணத்தில் வீடற்ற ஒரு குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபா பெறுமதியான வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம், செல்லக் கதிர்காமம், திஸ்ஸமஹாராம போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்களிடையே குறித்த பந்தயம் வைக்கப்பட்டுள்ளது.
அநுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு இடையே குறித்த பந்தயம் வைக்கப்பட்டது.
அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெறுவார் என பந்தயம் வைத்த வர்த்தகர் 25 இலட்ச ரூபாவை வென்றுள்ளார்.
குறித்த பணத்தில் வீடற்ற குடும்பமொன்றுக்கு அந்த வர்த்தகர் வீடொன்றை வழங்கியுள்ளார்.
இதைத் தவிர கதிர்காம பிரதேச சபைத் தலைவர் பந்தயத்தில் 20 இலட்ச ரூபாவை இழந்துள்ளதுடன், திஸ்ஸமஹாராம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் 15 இலட்ச ரூபாவை பந்தயத்தில் இழந்துள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகளும் பந்தயத்துக்காக வைத்து தோல்வியடைந்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச ரீதியில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில், உலகளாவிய கணிப்பு இணையத்தளம் ஒன்றினூடாக 48 ஆயிரம் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை பந்தயம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.