Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயில் மோதி ஓமந்தையில் பெண் பலி!!

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயில் மோதி ஓமந்தையில் பெண் பலி!!

வவுனியா மாவட்டம், ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி இன்றையதினம் (10-09-2024) மாலை சென்ற ரயிலானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.இச்சம்பவத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.