புதினங்களின் சங்கமம்

இலங்கைப் பெண்கள் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்!! அதிலும் இந்த மாவட்டப் பெண்கள் அந்த விசயத்தில் முதலிடமாம்??

பெண்களில் 40 சதவீதமானோர் அதிக உடற்பருமனைக் கொண்டதாக இருப்பதாக புதிய ஆய்வின் மூலம்
கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு பிரிவின் போஷாக்கு விஷேட
வைத்தியர் திருமதி ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உடற் பருமனை கொண்டோர் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே உள்ளனர். இவர்கள் பலர்
சுகாதார பிரச்சினைகளை எதிர்க்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். விஷேடமாக இவ்வாறான
தாய்மார்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகும் நிலை பெருமளவில் காணப்படுவதாகவும் இது மிக
மோசமான நிலை என்றும் அவர் கூறினார்.

கர்ப்ப காலப்பகுதியில் இவ்வாறான நிலை காணப்படுமாயின் எதிர்காலத்தில் அது பிள்ளைகளையும்
பாதிக்கும் என்றும் அவர் கூறினார். இதற்கு மேலதிகமாக இரத்த அழுத்தம் உள்ளிட்ட சில
பாதிப்புக்களும் ஏற்படக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம அளவிலான உணவுகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியில் ஈடுபடுதல் முதலானவற்றின் மூலம் உடல்
பருமனை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.