புதினங்களின் சங்கமம்

வற்றாப்பளையில் கொள்ளையடிக்கச் சென்ற போது பாம்பு கொத்தியதாக கூறப்பட்டவர்களின் பரபரப்பு பேட்டி இதோ!! வீடியோ

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவிலில் கொள்ளையடிக்கச் சென்ற போது சிசிரீவி கமரா சிஸ்டம் பெட்டிக்குள் இருந்த பாம்பு கொள்ளையர்களுக்கு கொத்தியதாக வம்பன் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அங்கு நடந்தது என்ன என்பது தொடர்பாக பாம்பு கொத்தியவர் மற்றும் கோயில் செயலாளர் கூறும் பரபரப்புத் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

வற்றாப்பளை அம்மன் கோவிலில் நிர்வாகத்துக்கு இடையில் கடும் பூசல்கள் நிலவுவது இந்தப் பேட்டியிலிருந்து தெரியவருகின்றது. பொலிசாரிடம் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் சென்று தமது கோவிலில் கொள்ளையர்கள் அடாத்தாக நுழைந்ததாக கூறி முறையிட்டதுடன் அவர்களில் ஒருவருக்கு பாம்பு கொத்தியதாகவும் பொலிசாரிடம் முறையிட்டிருந்தார்கள்.நிர்வாக உறுப்பினர்களுக்கு இடையில் நடந்த அடிபிடிகளுக்கு இடையில் ஒரு தரப்பால் கொள்ளையடிக்கச் சென்றவர்களை பாம்பு கொத்தப்பட்ட விடயம் பொலிசாருக்கு முறைப்பாடாக கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தகவல் பொலிசார் ஊடக அப்பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரியவந்துள்ளது. அதனையே ஊடகவியலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் பாம்பு கொத்தியதாக கூறப்பட்டவரும் கோவில் செயலாளராக உள்ளவரும் தங்களிடமும் விசாரித்து செய்தி வெளியிட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். அவர்களின் கருத்துக்களை நாம் இங்கு தந்துள்ளோம். கேட்டுப் பாருங்கள்.