கிளிநொச்சியில் கரைச்சி பிரதேசசபையின் 2 வருமானவரிப் பரிசோதகர்கள் கைது!!
கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் வைத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கைதுக்கான காரணங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.