புதினங்களின் சங்கமம்

பேஸ்புக்கை திட்டமிட்டு நிறுத்திவிட்டு நிறை வெறியில் பைத்தியர் அர்ச்சுனா நடாத்திய திருவிளையாடலால் தம்பிராசா கைது!!

தனது பேஸ்புக்கை செயற்பாடு அற்ற நிலையில் வைத்த பின்னர் தனது தொலைபேசிகளையும் நிறுத்திவிட்டு நிறை போதையில் நேற்று இரவு சாவகச்சேரி வைத்தியசாலை விடுதியில் படுத்திருந்துள்ளார் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் நிர்வாக அதிகாரி அர்ச்சுனா. இதனால் பைத்தியர் அர்ச்சுனாவின் விசர்கூத்தால் அவரது விசுவாசிகளான சில பைத்தியங்கள் பெரும் அல்லோலகப்பட்டார்கள். பைத்தியருக்கு ஏதோ நடந்துவிட்டது என கத்தத் தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக பைத்தியருக்கு மிகவும் பக்கபலமாக நின்று செயற்பட்ட தம்பி என அழைக்கப்படும் 64 வயது வயோதிபரான ஊழலுக்கு எதிரான அமைப்பு ஒன்றில் அங்கத்தவராக உள்ள தம்பிராசா என்பவர் யாழ் நகரப்பகுதியிலிருந்து நள்ளிரவு எனவும் பாராது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஓடியுள்ளார். அங்கு சென்று பைத்தியரின் விடுதிக் கதவைத் தட்டிய போது நிறை வெறியில் படுத்திருந்த பைத்தியர் அர்ச்சுனா எந்தவித பதிலும் வழங்காது மௌனமாக இருந்துள்ளார். பைத்தியருககு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணிக் கலக்கமடைந்த தம்பிராசா விடுதிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதுடன் பொலிசாருக்கும் தகவலை வழங்கியுள்ளார். இதனை அடுத்து அங்கு பொலிசார் விரைந்து வந்துள்ளார்கள்.

நிறை வெறியில் இருந்த பைத்தியர் அர்ச்சுனாவை பொலிசார் எழுப்பிய போது துாங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பைத்தியர் திடீரென விழித்து எழுந்து பொலிசாரை தாறுமாறாக ஏசியுள்ளார். அத்துடன் தனக்காக நள்ளிரவு என்றும் பாராது ஓடி வந்த தம்பிராசாவையும் கதவை உடைத்த குற்றச்சாட்டில் பொலிசாரிடம் மாட்டி விட்டுள்ளார். தற்போது தம்பிராசா கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

முழுப் பைத்தியம் போல் அர்ச்சுனா நடிக்கின்றானா? இல்லாவிட்டால் உண்மையில் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்பதை அறிவதற்கு கூட அவனுக்கு உதவுவதற்கு எந்த சொந்தங்களும் அவனை நாடாது கைகழுவி விட்டுள்ளார்கள். பேஸ்புக் பக்கத்தை யாரோ ஹைக் செய்து பாஸ்வேட்டை மாற்றியதாக குறித்த அர்ச்சுனா வெங்காயம் காலையில் தன்னை தற்போதும் நம்பியிருக்கும் அப்பாவிகளுக்கும் வெங்காயங்களுக்குமாக பதிவை போட்டுள்ளது. ஆனால் பேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் மாத்திரமே பேஸ்புக் கணக்கு ஏனையவர்களின் தேடுதலுக்கு தோன்றாது என்பதுடன் ஹைக் செய்து மாற்றப்பட்ட பேஸ்புக் கணக்கை மீண்டும் செயற்படு நிலைக்கு மாற்றுவதற்கு உடனடியாக முடியாது என்பதும் குறித்த வெங்காயத்துக்கு தெரியவில்லையா என சமூகவலைத்தளங்களில் பைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக கருத்தக்கள் வெளியாகி வருகின்றன.