புதினங்களின் சங்கமம்

பயிரிக்குளம் பகுதியில் வீட்டை கொள்ளையிட்டவனை அடையாளம் கண்ட பெண் கொள்ளையனால் அடித்துக் கொலை!!

நான்னேரிய பயிரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நான்னேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 30ஆம் திகதி பயிரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த சந்தேகநபர் கொள்ளையிட்டு கொண்டிருந்த போது வீட்டின் உரிமையாளர் அங்கு வந்துள்ளார்.இதன்போது சந்தேக நபரை அடையாளம் கண்டுகொண்ட வீட்டின் உரிமையாளரான பெண் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.அந்த வீட்டில் வசித்து வந்த 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நான்னேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, நேற்று (01) அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பயிரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நான்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.