புதினங்களின் சங்கமம்

தன்னைக் காப்பாற்றுமாறு கதறியழுத நாமல்! பரபரப்பு தகவலைக் கூறும் முக்கிய அரசியல் புள்ளி!!

போராட்டம் இடம்பெற்ற போது தம்மைக் காப்பாற்றுமாறு நாமல் கதறி அழுதார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.போராட்டம் நடைபெற்ற போது அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது, என்னைக் காப்பாற்றுங்கள் என தொலைபேசி ஊடாக நாமல் அழுது புலம்பினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இராணுவத் தளபதிக்கும் அவர் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியிருந்தார் என தெரிவித்துள்ளார்.அன்றைய நிலைமைகளை மறந்து இன்று நாமல் ராஜபக்ச மார்தட்டிக் கொள்வதாக நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான தருணத்தில் தம்மை மீட்ட ஜனாதிபதிக்கு நன்றி பாராட்ட மக்கள் அணி திரண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.